பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 176 அதிகாரம் 8: பகைமாட்சி 86. தம்மைவிட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடவேண்டும் தம்மைவிட மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும். 882 தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன் வலிய துணை யில்லாதவன், தானும் வலிமையற்றவன் என்ற நிலையில் ஒருவன் இருந்தால் அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு எதனால் ஒழிக்க முடியும்? 883 ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறியவேண்டுவதை அறியாதவ ாைய், பிறருடன் பொருந்தும் பண்பு இல்லாதவனாய், எவருக்கும் கொடுத்து உதவாதவனாய் இருந்தால், அவன் பகைவரால் அழிக்கப் படுவதற்கு மிகவும் எளியவனாவான். 854 ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தி யாள மாட்டாதவன்ய் இருந்தால் அவன்மீது பகைத்து வெற்றி யடைதல் எக்காலத்திலும். எவ்விதத்திலும், எவர்க்கும் எளிதாகும். 35 ஒருவன் நல்வழியை நோக்காதவனாய், பொருத்தமானவற்றைச் செய்யாதவனாய் தனக்கு வரும் பழியையும் பாராதவனாய், நற்பண்பும் இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லத் தக்கவனாவான். - 865. தன்னையும் பிறரையும் அறியாமைக்கு ஏதுவாகிய சினத்தை யுடையவனாய். மேன்மேலும் பெருகும் காமத்தவனாய் ஒருவன் இருப்பின், அவன் பகைமை பிறரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும். 387. ஒரு தொழிலைத் தொடங்கும்போது உடனிருந்து பின்கேடு களைச் செய்பவனின் பகையைப் பொருள் கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். 83. ஒருவன் குணம் எதுவும் இல்லாதவனாய்க் குற்றங்களும் பலவாக உள்ளவனானால் அவன் துணையற்றவன் ஆவான் அத் நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாக அமையும். 889 நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சும் இயல்பும் உடைய வருமான பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகை கொள்பவர்க்கு உயர்ந்த இன்பங்கள் எல்லாம் தொலைவில் நீங்காமல் நிற்கும். 30. நீதிநூல்களைக் கல்லாதவளோடு பகை கொண்டு எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.