பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு #78 அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல் 81. பகை என்று கூறப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்து மகிழும் பொழுதுபோக்கும் விளயாட்டாகவும் விரும்புதல் கூடாது. இது நீதிநூலின் முடிந்த முடியாகும். 83. வில்லை ஏராகவுடைய உழவராகிய வீரருடன் பகை கொண்டபோதிலும் சொல்லை ஏராகவுடைய அறிஞருடன் பகை கொள்ளலாகாது. 83. தான் தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன் பித்துப் பிடித்தவனைவிட அறிவில்லாதவனாகக் கருதப்பெறுவான். 84. பகையையும் நட்பாக்கிக் கொண்டு நடக்கும் பண்புடைய அரசனது பெருமையினுள்ளே இவ்வுலகமே அடங்கியுள்ளது. 85. தனக்கு உதவியாகத் துணையோ இல்லை; தன்க்குப் பகையே இரண்டு தானே ஒருவன் இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றைத் தனக்கு இனிய துணையாகக் கொள்ள வேண்டும். 81. இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந் தாலும் தெளியாவிட்டாலும், மற்றொரு காலத்தில் அழிவு வந்துற்ற ப்ேது அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வ்ாள விடவேண்டும். 87. தான் துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லலாகாது. வலியிழந்த நிலைமையைப் பகைவரிடத்தும் புலப்படுத்தலாகாது. 88. தான் செய்யும் செலவின் வகையை அறிந்து தன்னை வலிமைபடுத்திக் கொண்டு அது வெற்றியுடன் முடிவதற்கேற்பப் பொருளைப் பெருக்கிக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால் பகைவரிடத்தில் உள்ள செருக்குத் தானாகவே தேய்ந்தழியும். 89. களைய வேண்டிய முள் மரத்தை அஃது இளையதாக இருக்கும்போதே களைந்துவிட்வேண்டும் காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது களைய முற்பட்டல், கனகின்றவரின் கையைய்ே அது வருத்தும். 880 பகைவரது தலைமையைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும் அவர்மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிரோடிருப்பர் ஆகார் இஃது உறுதி.