பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $34 அதிகாரம் 91 பெண்வழிச் சேறல் 90. தம் மனையாள் விரும்புகின்றவாறு வாழ்கின்றவர் சிறந்த பயன்களை அடையார் கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாதபொருளும் அதுவேயாகும். 902. கடம்ையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய செல்வம் ஆக்கம் எல்லாருக்கும் క్త్ర காணத்தக்க செயலாக வளர்ந்து அவனையே நானும்படி செய்யும், 903, மனைவியிடத்துத் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே பழகும்போது நாணத்தைத் தரும், 904. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப்பயன் இல்லாத ஒருவனுக்குச் செயலாண்மை இருந்தபோதிலும் அது நல்லோரால் மதிக்கப்பெறாது. 905. மனைவிக்கு எப்போதும் அஞ்சி வாழ்கின்றவன், தான் தேடியபொருளேயானாலும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கும் அஞ்சுவான். - 906. தம் மனையின் மூங்கில் போன்ற தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர், வீரத்தால்துறக்கம்பெற்றஅமரரைப்ப்ோல்சிறபான நிலையில் வாழ்ந்தபோதிலும் பெருமை இல்லாதவரே ஆவர். 90. நாணமின்றி தன் இல்லாள் ஏவியபடியே செய்து ஒழுகு கின்றவனின்ஆண்மையைவிட நாணத்தைத் தன் இயல்பாகவுண்ட்ய் பெண்மையே பெருமையுடையது. - 908 தம் மனையாள் விரும்பியபடி நடப்பவர் தம் நண்பர் களின் குறையையும் தீர்க்க மட்டர் மறுமைக்குத் துணையாக உதவும் எந்த அறத்தையும் செய்யமாட்டார். 909, அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருளைச்செய்தலும் மற்ற கடமைகளும் மனையாள் ஏவலின்படி நடப்போரிடத்தில் இல்லை. 90. கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும் அதனாலாகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு மனையாளின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை ஒருகாலத்தும் இல்லை. -