பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 4. அதிகாரம் 2 வான் சிறப்பு 1. மழை தவறாது பெய்தலால்தான் இந்த உலகம் உயிர்கள் வாழ்ந்து வருகின்றது. ஆகையால் அந்த மழை உயிர்களுக்குச் சவ மருந்து அமிழ்தம் என்று உணரத் தக்கது. 12. உண்பவர்கட்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தந்து, பருகுவார்க்குத் தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும். 13. மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல்சூழ்ந்த பரந்த இவ்வுலகத்தில் பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். 14. மழை என்னும் வருவாயின் வளம் குன்றி விட்டால் பயிர்செய்யும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்கள். 15. பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை. மழையின்றி வளங்கெட்டு நொந்தவர்க்குத் துணையாக அமைந்து காக்க வல்லதும் மழையாகும். 16. லானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அன்றி. உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. 17. மேகம் கடலிலிருந்து நீரை முகந்து சென்று மீண்டும் அதனிடத்திலே பெய்யாதொழியுமானால், அப்பெரிய கடலும் தன் வளம் குன்றிப்போகும். 18. மழை முறையாகப் பெய்யவில்லையானால் இவ் வுலகத்தில் வானோர்க்காக நடத்தப்பெறும் திருவிழாக்களும் பூசனைகளும் நடைபெறாமல் நின்று போகும். 19. மழை பெய்யவில்லையானால் இப்பரந்த உலகில் பிறர் பொருட்டுச்செய்யப்படும் தானமும், தம்பொருட்டுச் செய்யப்படும் தவமும் இல்லையாகி விடும். 20. நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அதுபோல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது.