பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் # 87 நட்பியல் 92. வரைவின் மகளிர் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். 341 பயன்து.ாக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். 342 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று. 3 பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். 944, பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். 9す5 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். 9:6 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள். 947 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. go 8 வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. 9 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு 923