பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 138 அதிகாரம் 93 கள்ளுண்ணாமை 92. கள்ளின்மேல் விருப்பங் கொண்டு நடப்பவர் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். அதுவேயன்றி தாம் முன் எய்தியிருந்த புகழையும் இழந்து விடுவர். 92. அறிவைமயக்கும் கள்ளை அறிவுடையார் உண்ணலாகாது. சான்றோரால் நன்கு கருதப்பெறுவதை விரும்பாதவர் மட்டுமே வேண்டுமானால் உண்ணலாம். 923. எது செய்தாலும் மகிழும் பெற்ற அன்னையின் முன்பு கள்ளுண்டு களித்தல் துன்பம் தருவதாகும், அவ்வாறானால் குற்றம் எதனையும்பொறாத சான்றோரின் முன்அஃது என்னவாகும்? 924 நாணம் என்று சொல்லப்படும் நல்லவள் கள் என்று சொல்லப்படும் விரும்பத் தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் அருவருத்து அகன்று போவாள். 925 ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடலை மறக்கும் அறியாத நிலையை மேற்கொள்ளுதல் இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும். 926. உறங்கினார் அறிவிழந்திருப்பதால் இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர் அவ்வாறே கள் உண்பவரும் எப்போதும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர். 921. கள்ளை மறைந்திருந்து குடித்து அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள் உள்ளுரில் வாழ்பவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பெற்று எந்நாளும் எள்ளி நகையாடப்படுவர். 928. கள்ளை உண்டபொழுதே முன் ஒளித்த குற்றம் மிகுதி யாக வெளிப்படுதலால் மறைவ்ாகக் கள்ளையுண்டு 'யான் ஒரு போதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதைக் கைவிடவேண்டும். 929. கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்த்ல் நீரினுள் மூழ்கினவனைத் தீ விளக்குகொண்டு தேடுவதைப்போல் முடியாத செயலாகும். 93. கள் உண்ப்வன் தான் உண்ண்ாதபொழுது உண்டு களித் தலனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சேர்வு நிலையும் இப்படித்தான் ஆகும் என்று நினைக்க மாட்டானோ?