பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 签 அதிகாரம் 95 13గ్రీజ్డ్ 94. ஒருவனுடைய உணவும் செயல்களும் உடற்கூறுபாட்டிற்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வாதம், பித் தம், சிலேத்தும்ம் என எண்ணி வகுத்த மூன்று நோயைச் செய்யும். 92. ஒருவன் முன் உண்ட உணவு செரித்த தன்மைய்ைத் தெளிவாக அறிந்து அதன் பின்னர் தக்க அளவு உண்பானானால், அவன் உடம்பிற்கு மருந்து என்னும் ஒன்று வேண்டியதில்லை. 943 ஒருவன் தான் முன்னுண்டது செரித்துவிட்டால், பின்வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும் அதுவே உடம்பு பெற்ற அவன் அதை நெடுங்காலம் காப்பாற்றும் வழி, 94. முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடில்லாத உணவைத் தெரிந்தெடுத்து அதனையும் நன்றாகப் பசித்த பிறகு உண்ண வேண்டும். 945 மீறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால் அவன் உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான பிணிகளால் துன்பம் இல்லை. 946.அளவுக்குச்சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிலை நிற்பது பிேல் அளவுக்கு மிகுதியாக இண்பவ னிடம் நோயும் நீங்காமல் நிலைத்து நிற்கும். 94. பசித்தியின் அளவின்படி அல்லாமல் காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு ஒருவன் உண்பானாயின், அதனால் நோய்களும் அவனிடத்தில் எல்லையில்லாமல் வளரும். 948 குணம் குறிகளால் நோய் இன்னதென்று துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து,செய்யும் வகைபிழையாமல்மருத்துவம் செய்தல் வேண்டும். 99. மருத்துவத்தைக் கற்றறிந்தவன் நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் தன்மையையும் அளவையும் காலத்தின் இயல்பையும் நன்கு கருதிய பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும். 95. நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் ருேந்து வகைகள், மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துலமுறை நான்குவகைப் பாகுபாடு உடையது.