பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 2ss அதிகாரம் 99 சான்றாண்மை 98. நமக்கு இது தகுவது என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கும் என்பர் நூலோர், 98. சான்றோர்களின் நலம் என்பது, அவர்களுடைய குணநலன்களால் வந்த சிறப்பே அஃது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. 983 அன்பு நாணம் ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சல்பு என்னும் பாரத்தைத் தாங்கியுள்ள துண்களாகும். - 98. தவம் ஒர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப் படையாகக் கொண்டது. சால்பு பிறரது குற்றத்தை அறிந்தாலும் வெளியே சொல்லித் திரியாத நற்பண்பை அடிப்படையாகக் கென்டது. . 98. ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது அதற்குத் துணையாவாரைப் பணிாேழியால் தாழ்ந்தும் கூட்டிக் கொள்ளுதல் கால்புடையார்தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவேயாகும். 88ல், சல்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால், தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்விய்ை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும். 98. தமக்குத் தீமை செய்தவர்க்கும் இனிய செயல்களைச் செய்யாவிட்டால்சான்றோரின் சல்பு என்னபயனை உடைத்தாகும்? & அல்பு என்னும் வலிமை ஒருவரிடம் உறுதி பெற்றிருந் தால், அவருக்கு வரும் வறுமைத் துன்பங்களும் அவருக்கு இழிலான நிலைமையைத் தந்துவிடாது. 988, சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஊழிக்காலத்தில் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர். 990. பல குணங்களாலும் நிறைந்தவர் தம் பண்புகளில் குன்று வார்களானால், இந்தப் பெரிய திலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.