பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 202 அதிகாரம் 100 பண்புடைமை 1. எல்லாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பவருக்குப் பண்புடையவராக வாழும் நன்னெறியினை அடைந்து சிறப்படை தலும் எளிது என்று கூறுவர். 932 பிறர்மேல் அன்புடைமையும் உலகத்தோடமைந்த உயர் குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தலும் ஆகிய இவ்விரண்டும் பண்புடையவராக வாழும் நல்வழியாகும். 93. உடம்பால் ஒருவரோடொருவர் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று பொருந்தத் தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புடைமையாகும். 99. நீதிய்ையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் தமக்கும் பயன்பட வாழும் பெரியோரின் நல்ல பண்பினை உலகத்தார் அனைவருமிே போற்றிக் கொண்டாடுவர். 935 ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும். ஆகையால் பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன. 395 பண்புடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் இடையறாது தொடர்ந்து இயங்குகின்றது: அங்ஙனம் இல்லையாணல் அது மண்ணில் புகுந்து அழிந்து விடும். 99. நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம் போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் ஒரறிவேயுள்ள மரத்தைப் போன்றவரே யாவர். 998 தம்மொடு நட்புக் கொள்ளாதவராகிப் பகைமையே செய் கின்றவரிடத்திலும் தாம் பண்புடையவராக ஒழுகாமை அறிவுடைய வர்கட்கு இழுக்காகும். 99. பண்பு இல்லாமையால் ஒருவரோடொருவர் கலந்து பழகிய உள்ளம் மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற்பொழுதிலும் இருளில் கிடப்பதாகும். 1000, பண்பில்லாதவன் முன்னைய நல்வினையால் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல ஆவின் பால் வைத்த கலத்தின் குற்றத்தால் தன் சுவை முதலியன கெட்டாற்போன்றதாகும்.