பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 214 அதிகாரம் 106 இரவு 105. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரந்து கேட்கலாம். அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று கை விரிப்பாராயின் அஃது அவருக்குப் பழி கேட்டவருக்குப் பழி இல்லை. 1952 இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்கு மானால் அவ்வாறு இரத்தலும் ஒருவருக்கு உலகில் இன்பம் தருவதற்கு காரணமாகும். 1053. ஒளிப்பதறியாத நெஞ்சும் கடமை உணர்ச்சியும் உள்ள வரின் முன்னேடோய் நின்று அவரிடம் ஒரு பொருள் இரந்து கேட்பதும் ஒர் அழகு உடையதாகும். 1054, န္က ႏိုင္ဆို உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாத வரிடம் சென்று இரந்து கேட்டலும் வறியார்க்கு ஈதலைப் போலவே சிறந்ததாகும். 1055 தம்மிடம் உள்ளதை இல்லை என்று ஒளித்துக் கூறாத நன்மக்கள் இருப்பதனால்தான் உயிரைக் காக்கும்பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர். 105. உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண் டால், இரப்பவரின் வ்றும்ைத் துன்பங்கள் எல்லாம் ஒருசேர அவரைவிட்டு ஒழியும். 105. இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண் டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கி உள்ளுக் குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும். 1058. வறுமையால் இரப்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுட்ையபெரிய உல்கினரின் போக்குவரவுகள் மரப்பாவை இயந்திரக்கயிற்றால்ஆட்டப்பட்டுச்சென்று வ்ந்தாற் போன்றதாகும். 1059. தம்மிடம் வந்து பொருள் இல்லை என்று இரந்து கொள்பவர் எவரும் இல்லாதபோது கொடுக்க விழைவ்ார்கட்கும் இவ்வுலகில் என்னபுகழ் உண்டாகும்? 1960, இரப்பவன் தனக்கு எவரிடத்திலும் சினம் கொள்ள திருக்க வேண்டும் பொருள் வேண்டும்பொழுது வந்து உதவாது என்பதற்கு அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.