பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 8 அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் 31. அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் நல்கும். அதனால் அறத்தைவிட உயிருக்கு நன்மை தருவது வேறு இல்லை. 32 ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை. அந்த அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கேடும் வேறு இல்லை, 33. செய்யக்கூடிய வகையால் இயன்றவரை அறச் செயலைச் செய்யக் கூடிய இடங்களிலெல்லாம் இடை விடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். . 34 ஒருவன் தன் மனத்திடத்துக் குற்றமிலனாக இருத்தல் வேண்டும் அவ்வளவே அறம் எனப்படும் மனத்துய்மை இல்லாத மற்றவை யாவும் ஆரவாரத் தன்மை யுடையவை. 35. பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம்தராமல் ஒழுகிவருவதே அறமாகும். 36. இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைக்காமல் அறத்தை அன்றே செய்தல் வேண்டும் அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். . 3.பல்லக்கை சுமப்பவனும் அதன்மேல்அமர்ந்து செல்பவனும் ஆகிய அவர்களிடையே அறத்தின் பயன்இஃது எனக் கூறவேண்டா, 38. செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானாயின் அதுவே அவன் பிறவி வரும் வழியை அடைக்கும் கல்லாகும். 39. அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; மற்றவகையில் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை புகழும் அற்றவை. 40. ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே அவன் செய்யாமல் காக்கவேண்டியது எல்லாம் பழியே.