பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 228 அதிகாரம் 12 நலம் புனைந்துரைத்தல் 11. அனிச்ச மலரே! f முகர்ந்தாலே வாடும் நல்ல மென்னைத் தன்மை பெற்றுள்ளாய்! வாழ்க! யாம் விரும்பும் காதலியோ உன்னைவிட மென்மைத்தன்மை உடையவள். 12. நெஞ்சமே இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற குவளை மலர்களை ஒத்துள்ளன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் 13. மூங்கில் போன்ற தோளையுடைய இவளுக்குத் தளிரே மேனிமுத்தே பல் இயற்கை மணமேமணம்:வேலே மையுண்டகண். 14. குவளை மலர்கள் காணும் தன்மை பெறுமானால் இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் என்றுதலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 15. அவள் தன் இடையின் நுண்மையை நினையாதவளாய் காம்புகலையாமல் அனிச்ச மலரைக் கூந்தலில் சூடினாள் அவற் றல் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாக ஒலியா. 16 விண்மீன்கள் திங்களுக்கும் இவளது முகத்திற்கும் யாதொரு வேறுபாடும் கண்டறிய முடியாமல் தம் நிலையில் நிற்க முடியாமல் கலங்கித் திரிகின்றனவே. tti), தேய்ந்து பின்பு படிப்படியாக வளர்ந்து நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல இந்த நங்கையினுடைய கத்தில் களங்கம் உண்டோ? இல்லையே! 118 திங்களே இந்த நங்கையின் முகம்போல தேய்தல் வளர்தல் இன்றியும், களங்கம் இன்றியும் நின்னல் ஒளிவீச முடியுமானால் நீயும் இவள்போல் என்காதலுக்கு உரிமைபெறுவாய். 119. வான்மதியே குவளை மலர்போன்ற கண்களையுடைய இவளது முகத்தை நீ இத்திருக்க விரும்பினால் இனியாவது நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதிருப்பாயாக! 12. அனிச்ச மலரும் அன்னப் பறவையின் மெல்லிய இறகுகளும் இம்மாதின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிப் பழம் முள்போல் வருத்தும்.