பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 23 அதிகாரம் 1 படர் மெலிந்து இரங்கல் 161 இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறப்பேன். ஆனால் அஃது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவதுபோல் கரந்து சுந்துப் பெருகுகின்றது. 182 இக் காமநோயைப் பிறர் அறியாமல் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயை விளைவித்த காதலர்க்குத் துது அனுப்பித் தெரிவிக்கவும் நாணம் தருகின்றது. 163. பிரிவுத் துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இரு முனைகளிலும் தொங்குகின்றன. 164, காமநோயாகிய கடலே எனக்கு நிலையாக உள்ளது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்வத்ற்குப் பாதுகாப்பாகிய தோணியைப் பெற்றேன் இல்லை. 165, இன்பமாகிய நட்புடைய நம்மிடமே துன்பத்தை வரச் செய்ய வல்லவர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்ன செய்வாரோ? 16ல் காமம் மகிழ்விக்கும்பொழுது அதன் இன்பம் கடல் அளவு பெரிதாயுள்ளது. அது நம்மை வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரிதாக உள்ளதே. 16. காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை. இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே உறங்காமல் வருந்தியபடித் தனியாக இருக்கின்றேன். 168.இந்த இராக் காலமும் இரங்கத்தக்கதாய் உள்ளது. மற்ற எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் தனக்குத் துணை இல்லாமல் உள்ளது. 18. பிரிவுத் துயிர்ாலே வருந்தும்போது மிகநீண்டது போலக் கழிகின்ற இராப்பொழுது, நம்மைவிட்டுப் பிரிந்த கொடியவரின் கொடுமையைவிட மிகமிகக் கொடியது. 10. காதலர் இருக்கும் இடத்திற்கு என் உள்ளத்தைப்போல், உடலும் செல்ல முடியுமானால் என் கண்கள் இவ்வாறு கண்ணீர் வெள்ளத்தில் நீந்த் வேண்டியதில்லை.