பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 2áč அதிகாரம் 18 கண்விதுப்பழிதல் 11. இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவா நீங்காத இக்காம நோயை யாம் பெற்றோம்? அவ்வாறிருக்க, காட்டிய கண்கள்தாமே இப்போது அழுவது ஏன்? 12. பின்விளைவுபற்றி ஆராய்ந்து உணராமல் அன்று அவரை நோக்கிக் காதல் கொண்ட கண்கள் இன்று அன்பு கொண்டு என் துயரைப் பகுத்து உணராமல் தாமும் துன்பத்தால் வருந்துவது ஏன்? 13 அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன, இது நகைக்கத்தக்க தன்மையுடையது. 14 அன்று என் கண்கள் தப்பிப் பிழைக்க முடியாத அளவு தீராத காமநோயை என்னிடம் விளைவித்து நிறுத்திவிட்டு, தாமும் அழ முடியாமல் நீர்வற்றி வறண்டு விட்டன. 175. அன்று கடலும் தாங்கமுடியாத பெரிதான காமநோயை உண்டாக்கிய என் கண்கள். இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் அழுகின்றன. 16. எமக்கு அன்று இந்தக் காம நோயை உண்டாக்கிய கண்கள் இன்று தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் இனியதே. f. அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று உறக்கமின்றித் துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போவதாக 18. உள்ளத்தால் விரும்பாமல் சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் உள்ளார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை. 19. காதலர் வாராதொழியினும் உறங்கா வந்தாலும் உறங்கா, இவற்றுக்கிடையே என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை அடைந்துள்ளன. t80. அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களையுடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறை பொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு எளிதாகும்.