பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 箕〕 அதிகாரம் 5 இல்வாழ்க்கை 41இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுபவன் அறத்தின் இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான். - 42. துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தனக்குத் தொடர்புடைய இறந்தவர்க்கும் இல்வாழ்வினனே துணை யாவான். 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தினர், சுற்றத்தார். தன்குடும்பம் என்ற ஐந்திடத்தும் அறநெறி வழுவாமல் பேணுதல் இல்வாழ்வானின் சிறந்த கடமையாகும். 44. பொருள் சேர்க்கும்போது பழிக்கும் அஞ்சுதல், செலவு செய்யும்போது பகுத்து உண்ணுதல் ஆகிய இரண்டும் ஒருவனிடத்து இருந்தால் அவனது வாழ்க்கையில் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. 45 ஒருவனது இல்வாழ்க்கையில் கணவன் மனைவி யூரிடையே அன்புப் பிணைப்பும் அற நெறியில் ஒழுகுதலும் இருக்குமாயின் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவேயாகும். 46 ஒருவன் இல்வாழ்க்கையை அறநெறிப்படி நடத்து வானாயின்.அவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது ஒன்றுமே இல்லை. 41. அறநெறியின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன் வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான். 48. பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து தானும் அறநெறியில் தவறாது வாழ்பவனின் இல்வாழ்க்கை தவசியரின் நோன்பைவிட வலிமையுடைத்து. 49. அறம் என்று சிறப்பித்துச் சொல்லப் ப்ெற்றது இல்வாழ்க்கையே அதுவும் பிறன் பழிக்கும் குற்றம் இல்லையாயின் சிறப்புடைய தாகும். 50. உலகில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்பவன் வானுலகிலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான்.