பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 248 அதிகாரம் 122 கனவுநிலை உரைத்தல் هر. 121. பிரிவால் வருந்திய நான் அயர்ந்து உறங்கிய போது காதலர் அனுப்பிய துதோடும் வந்த கனவுக்கு யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்து உதவுவேன்? - 122. யான் விரும்பும்போது என் கண்கள் உறங்குமானால் கனவில்வந்து தோன்றும் காதலருக்குயான்தப்பிப்பிழைத்திருக்கும் உண்மையைச் உரைப்பேன். த 1213. நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரைக் கனவிலாவது கண்டு மகிழ்வதால்தான் என் உயிர் இன்னும் நீங்காம்ல் உள்ளதாகின்றது. 1214. நனவில் வந்து கூடி அன்பு செய்யாத காதலரைத் தேடி క్లిఫ్త్ அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் உண்டாகின்றன. 1215 முன்பு நனவில் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுது மட்டுமே இனிதாக இருந்தது. இப்பொழுது கானும் கனவும் கண்டபொழுது மட்டுமே இன்பமாக உள்ளது. - 1:16, நணவு எனப்படும் ஒரு நிலை இல்லாதிருக்குமானல், கனவில் வருகின்ற நம் காதலர் எப்பொழுதுமே நம்மை விட்டுப் பிரியாதிருப்பர் அல்லவோ? - - 121. நனவில் வந்து நமக்கு அன்பு செய்ய நினையாத அக் கொடிய காதலர் கனவில் மட்டும் வந்து எம்மை வருத்துவது எதனாலோ? . 1218. நான் உறங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழிக்கும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார். 1219 கனவில் காதலர் வரக்காணாத மகளிர். நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருந்தி மனம் நொந்து கொள்வர். 120. நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரை இவ்வூரார் பழித்துப் பேசுகின்றனரே இவர்கள் எம்மைப் போல் தம் காதலரைக் கனவில் காண்பதில்லையோ! -