பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 360 அதிகாரம் 128 குறிப்பறிவுறுத்தல் 1271, நீ சொல்லாம்ல் மறைத்தாலும் அதற்கு உடன்படாமல் நின் மறைப்பையும் கடந்து நின் கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்ல முற்படுகின்ற செய்தி ஒன்று உள்ளதாகும். 22 கண் நிறைந்த பேரழகும் மூங்கில் போன்ற அழகிய தோளும் உடைய என் காதலிக்குப் பெண் தன்மை நிறைந்துப் பொலிவுறும் இயல்பு மிகுதியாக உள்ளது. 23 நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல என் கதலியின் அழகினுள்ளேயும் அமைந்து புறத்தே திகழ்கின்ற குறிப்பு ஒன்று உள்ளது. - 1274. அரும்பும் மொட்டினுள் அடங்கியிருக்கின்ற மனத்தைப்போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளேயும் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது. 1275. செறிந்த தொடியுள்ளவுளான என் காதலி செய்து விட்டுப் போன கன்னமான குறிப்பு என் மிக்க துயரத்தைத் தீர்க் கும் மருந்து ஒன்று உடையதாக உள்ளது. 2ல் பெரிதும் அன்பு காட்டி விருப்பம் மிகுதியாகுமாறு கூடு தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் கைவிட்டுப் பிரிய எண்ணுகின்ற உட்கருத்தையும் உடையதாகும். 7ே. குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவராகிய, நம் காதலர் நம்மைக் கைவிட்டுப் பிரிந்த பிரிவை நம்மைவிட நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து, கழன்று விட்டனவே! 28. நேற்றுத்தான் எம்முடைய காதலர் பிரிந்து சென்றனர். பாமும் மேனி பசலை திறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம். 279. தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்டோக்கு என்பதேயாகும் 28.மகளிர் தம் காமநோயைத் தம் கண்ணினாலே தெரிவித்துப் பிரியாமலிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண் தன்மையுடையது என்று மொழிவர்.