பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 262 அதிகாரம் 129 புணர்ச்சி விதும்பல் 28. நினைத்த பொழுதிலே கிளர்ந்தெழுதலும், கண்ட பொழுதிலே இன்புறுதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை, காமத்திற்கு உண்டு. 1282. காமம் பனையளவாகப் பெருகி வரும்போது காதல் ரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் பிணங்காமல் இருத்தல் வேண்டும். 283, நம்மை விரும்பாமல் புறக்கணித்துத் தமக்கு விருப்பு மானவற்றையே செய்து ஒழுகினாலும் எம்முடைய கண்கள் காதலரைப் பார்க்காமல் அமிைதி அடையவில்ல்ல. 28. தோழி யான் அவரோடு பிணங்குவதற்காகச் சென் தேன். ஆனால் என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து விட்டு அவரோடு இணைந்து கூடுவதற்காகச் சென்றது. 1285. மை தீட்டும்பொழுது தீட்டும் கோலைக் காணாத கண் களைப்போல என் காதலரைக் கண்டபோது மட்டும் அவருடைய குற்றங்களை நினைக்காமல் மறந்து விடுகிறேன். 238. என் காதலரைக் காணும்போது அவர் போக்கிலே தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோதோ தவறல்லாத நல்ல நல்ல செயல்களைக் காண்பதில்லை. 123 ஒடும் வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் அதனுள் பாய்கின்றவரைப்போல், பிணங்குதலால் பயன்iல்லை என்பதை அறிந்திருந்தும் நாம் ஊடுவதால் பயன் என்ன? 1238. கள்வரே இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப்போல நின்மார்பும் ஆசையூட்டுகின்றது. 1289 அனிச்ச மலரைவிடக் காமம் மிக மென்மையானது: அந்த உண்மையை அறிந்து அதன் சிறந்த பயனைக் பெறக்கூடியவர் ஒருசிலரேயாவர். 1290, கண் நோக்கத்தளவில் பிணங்கினாள் பின், என்னை விடத் தான் விரைந்து தழுவுவதில் விருப்பம் உடையவளாகத் தன்பிணங்கிய நிலையையும் மறந்து அவள் கலங்கினாள்.