பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 264 அதிகாரம் 130 நெஞ்சொடு புலத்தல் 1291 நெஞ்சமே அவருடைய நெஞ்சம் நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும் நீ எமக்குத் துணையாகாததுதான் ஒனோ? 292 என் நெஞ்சமே நம்மீது அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைத்து அவரிடமே செல்கின்றாயே! என்ன மடமை. இது 1293. நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்ப்டியே அவர்பின் செல்கின்றாயே, அதற்குக் காரணம் துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ? 29. நெஞ்சமே ஊடலைச் செய்து அதன் பயனையும் துகரமாட்டாய் இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி நின்னோடு கலந்து ஆராய்பவர்தாம் எவரோ? 1295. காதலரைப் பெறாதபோதும் பெறாமைக்கு அஞ்சும்: பெற்றபோதும் பிரிவாரோ என்று நினைத்து அஞ்சும் இவ்வாறு என் நெஞ்சமே தீராத துயரை உடையதாகின்றது. 296. காதலரைப் பிரிந்த காலத்தில் தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்த போது என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல் என்னைத் தின்பதுபோல் துன்பம் தருவதாக இருந்தது. 129. காதலரை மறக்க முடியாத என் சிறப்பில்லாத மடநெஞ் சேடு சேர்ந்து மறக்கத்தகாததாகிய நாணத்தையும் மறந்து விட்டேன். 1298 பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணிஉயிரின்மீது காதல் கொண்ட் என் நெஞ்சம் அவருடைய் உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. 1299, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே தமக்குத்துன் பம் வந்தபோது துணையாகாவிட்டால் வேறு எவர்தாம் துணை யாவார்? - 1300 தாம் உரிமையாகவுடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதேயாகும்.