பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 12 அதிகாரம் 6 வாழ்க்கைத்துணை நலம் 51. இல்வாழ்க்கைக்குத் தகுந்த நற்பண்பு உடையவளாகித் தன் கணவனின் பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்து கின்றவளே சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள். 52 இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையாயின், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப் பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது. 53. மனைவி நற்குண நற்செய்கைகள் உடைய வளானால் கணவனிடத்தில் இல்லாதது ஒன்றும் இல்லை, அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையாகும். 54. கற்பு என்னும் மனவுறுதி இல்லாளிடம் இருக்கப் பெற்றால் அந்தப் பெண்ணைவிடப் பெருமை மிக்கவை வேறு ஒன்றும் இல்லை. 55. வேறு தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கண வனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் 'பெய்' என்றால் மழை பெய்யும். 56. கற்ற நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் பாதுகாத்து இருவரிடமும் புகழ் நீங்காமல் காத்துச் சோர்வு அடையாதவளே சிறந்த பெண்ணாவாள். 57. மகளிரைக் காவல் வைத்துக் காப்பதால் பயன் இல்லை. அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாமே காக்கும் காப்பே சிறப்பானதாகும். 58. தம்கணவனைப் போற்றிக் கடமை செய்யும் மகளிர் பெருஞ் சிறப்புடைய புத்தேளிர் வாழும் மேலுலக வாழ்வினைப் பெறுவர். 59. புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை. 60. மனைவியின் மாண்புடைய நற்பண்பே இல்வாழ்க் கையின் மங்கலம் நன்மை என்று கூறுவர் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலம் என்றும் மொழிவர்.