பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவ மாலை பொருக்கு மணிகள் பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம் ஆவிற்கு அருமுனரியா யானைக்கு அதரரும்பத் தேவிற் றிருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா. (36) - கவிசாகரப் பெருந்தேவனார் தேவிற் சிறந்த திருவள்ளுவர்குறள்வெண் பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற் குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றும் செயலில்லை என்னும் திரு. (39) - - உறையூர் முதுகூற்றனார் அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயில் கேளா தனவெல்லாம் கேட்டு. (50) - - கொடிஞாழன் மாணிபூதனார் வள்ளுவர் பாட்டின் வளமுறைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்னுமான் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து. (53) - ஆலங்குடிவங்கனார் கடுகைத் துளைத்து.ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். (54) - இடைக்காடர் அணுவைத் துளைத்து.ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். (55) - .. ஒளவையார்