பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 13 அதிகாரம் 9 விருந்தோம்பல் 81. மனைவியுடன் வீட்டில் இருந்து பொருள்களைப் பேணி இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டேயாகும். - 82. விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமேயாயினும் அது விரும்பத்தக்கது அன்று. - 83. நாடோறும் தன்னை நாடிவரும் விருந்தினரைப் போற்று கின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெடுதல் என்றுமே இல்லை. 84. முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் போற்று கின்றவனுடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள். 85. விருந்தினரைப் போற்றியபின் எஞ்ைசியதைத் தான் உண்ணுகின்றவனுடைய நிலத்தில் விதைக்காமலேயே பயன் விளையும். 88. வந்த விருந்தினரைப் போற்றி இனி வரும் விருந் தினரை எதிர்பார்த்திருக்கின்றவன் வானுலகத்திலுள்ள தேவர்க்கும் நல்ல விருந்தின னாவான். 87. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவி லானது என்று கூறமுடியாது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அஃது அமையும். 88. விருந்தினரை ஒம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பின்னர் பொருளை வருந்திக் காத்துப் பின்பு இழந்து பயனை அடையாமற் போனோமே என வருந்தும் நிலையை அடைவர். 89. செல்வச் செழிப்புடன் இருக்குங் காலத்தில் வறுமை என்பது விரும்தோம்பலைப் போற்றாத அறியாமையாகும். அஃது அறிவிலிகளிடமே காணப்படும். - 90. அனிச்சமலர் மோந்தவுடன் வாடி விடு.ே விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம்மலராமல் வேறுபட்டுத் தோன்றியவுடன் வாடி நிற்பர்.