பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 2{} அதிகாரம் 10 இனியவை கூறல் 91. செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் இனிய சொற்களாய், அன்பு கலந்தனவாய், வஞ்சம் இல்லாதவைாய் இருக்கும். 92. முகம் மலர்ச்சியுடன் இன்சொல் உடையவனாக இருப்பது மனம் மகிழ்ந்துபொருள்கொடுப்பதைவிடச் சிறந்ததாகும். 93. முகத்தோற்றத்தால் விருப்பத்துடன் இனிமையுடன் நோக்கி உளம் கலந்த இன்சொற்களைக் கூறுவதே அறமாகும். 94. எவரிடத்தும் இன்பத்தை நல்கும் இன் சொல் வழங்கு வோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமையும் இல்லாமற் போகும். 95. பணிவு உடையவனாகவும், இன்சொல் வழங்குவோ னாகவும் இருத்தல் ஒருவனுக்கு அணிகலனாகும். இவையன்றி உடம்பில் அணியவை அணிகளாக. 96. பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமையுடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து டோகும் அறம் வளர்ந்து பெருகும். 97 பிறர்க்கு நற்பயனை நல்கி இனிமைப்பண்பிலிருந்து நீங்காத சொற்கள் வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும். 98. துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய சொற்கள் வழங்குவோனுக்கு மறுமையிலும் இம்மையிலும் இன்பம் நல்கும். 99, இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பம் தருதலைக் காண்பவன் வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ? 100. இனிய சொற்கள் உள்ளபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் அதனை உண் ணாமல் காயைப் பறித்துத் தின்பதை ஒத்தது.