பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 28 அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை 13. ஒழுக்கம் எல்லோர்க்கும் மேன்மை தருவதாக இருப் பதனால்,அது உயிரைவிடச் சிறந்ததாகச் சான்றோரால் காக்கப்படும். 132 ஒழுக்கத்தை வருந்தியேனும் போற்றிக் காக்க வேண்டும். அறங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்து தெளிந்தாலும், ஒழுக்கமே வாழ்க்கையில் சிறந்த துணையாக உள்ளது. 33. ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப் பிறப்பின் தன்மையாகும் ஒழுக்கம் தவறுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும். 13. கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஒதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் மறை ஒதுவானின் குடிப் பிறப்பின் உயர்வு, ஒழுக்கம் குறைவுபட்டால் கெட்டொழியும், 135. பொறாமையுள்ளவனிடம் செல்வம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையிலும் உயர்வு இல்லை யாகும்: 136. ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமையுடைய சான்றோர் ஒழுக்கத்தில் வழுவாமல் காத்துக் கொள்வர், 13. ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவர் ஒழுக்கக் கேட்டால் அடையக் கூடாத பழியை அடைவர். 138. நல்லொழுக்கம் இனமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக அமையும் தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும். 39. மறந்தும் தீய சொற்களை வாயினால் சொல்லும் குற்றம் நல்லொழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும். 140. உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையை அறியாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவில்லாதவரே , ألفهري