பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 32 அதிகாரம் 16 பொறையுடைமை 151 தன்மேல் நின்று தன்னைத் தோண்டுபவரையும் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும். 152 வரம்புகடந்து ஒருவர் இழைத்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ளவேண்டும் அதனை நினையாமலே மறந்து விடுதல் பொறுமையைவிட நல்லதாகும். 53. வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் விடுதல் வலிமையுள் வலிமையாவது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். 154 ஒருவன் நற்குணங்கள் தன்னைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமானால் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். 55. பிறர் தீங்கு இழைத்தபோது அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் வருத்தினவரை அறிவுடையோர் ஒருபொருளாக மதியார். ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்து மதிப்பர். - - 58. தீமை இழைத்தாரைப் பொறுக்காமல் வருத்தினவருக்கு ஒரு நாளையஇன்பமாகும். அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு, 5. தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும் அதனால் மனம் மிகவும் நொந்து அவருக்கு அறமற்ற செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது. 158 மனச் செருக்கினால் தீமை செய்தவரைத் தாம் தம்மு டைய பொறுமைப்புண்பினால் பொறுத்து வென்றுவிடுதல் வேண்டும். 59. எல்லைமீறி நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் துறவியரைப் போலத் துய்மையானவர் ஆவர். 160. உணவு கொள்ளாமல் நோன்பு கிடப்பவர் பெரியர், பிறர் தம்மை நோக்கிச் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.