பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 38 அதிகாரம் 19 புறங்கூறாமை 181. ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய்த் தீய செயல்களையே செய்தொழுகுபவனானாலும் அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது. 182.அறத்தையே அழித்துத் தீமைகளைச்செய்து வருவதைவிட, ஒருவன் இல்லாத விடத்து அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகம் மலர்ந்து பேசுதல் தீமையாகும். 183, புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாதழ்லைவிட, அவ்வாறு செய்யாமல் இறந்து விடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும். 18. நேரில் நின்று இரக்கமின்றிக் கடுமையாகப் பேசினாலும் பேசலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துக் கூறுதல் ஆகாது. 185. அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மையினை ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் அறிந்து கொள்ளலாம். 186, பிறருடைய குற்றங்களைக் கூறுகின்றனவனது பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான். 18. மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் பிறர் தம்மை விட்டு நீங்கும்படிப் புறங்கூறி நண்பரையும் பிரித்து விடுவர். 188. நெருங்கிப் பழகியவரின் குற்றத்தைப் புறங்கூறித் துற்றும் இயல்புடையவர்.பழகாத அயலளிடத்து என்னசெய்வாரோ? 189 ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுபவனின் உடலை இவ்வுலகம் அறத்தை எண்ணிச் கமக்கின்றது போலும் 19), அயலாரது குற்றங்களைக் காண்பது போலவே, தம் குற்றங்களையும் காண்டாரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?