பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 39 இல்லறம் 19. புறங்கூறாமை அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. 18t அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. 182 புறங்கூறி பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும். #83 கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். #84 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். #85 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெறிந்து கூறப் படும். #86 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். 487 துன்னியார் குற்றமும் தூற்றும மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. $83 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. 83 ஏதிலார் குற்றம்போல் தம்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 490