பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 40 அதிகாரம் 20 பயனில சொல்லாமை 191. பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுவோன் உலகினர் எல்லோராலும் இகழப்பெறுவான். 192. பலர் முன்பாகப் பயனற்ற சொற்களைப் பேசுதல், நண்பர்களிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலைவிடத் தீமையுடையது. 193. ஒருவன் பயனல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் பேச்சானது அவன் நல்ல பண்பற்றவன் என்பதை உலகிற்கு அறிவிக்கும். 194. ஒருவன் பயனோடு பொருந்தாத பண்பற்ற சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அச்செயல் அறத்தோடு பொருந்தாதாகி அவனை நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். 195. நல்ல பண்புடையவர்களும் பயனில்லாத சொற்களைச் சொல்வார்களாயின் அவர்களுடைய மதிப்பும் சிறப்பும் ஒருங்கே நீங்கி விடும். 196. பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை 'மனிதன் என்று சொல்லற்க மக்களுள் பதர் என்று சொல்லுக. 19?, அறன் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்: சான்றோர் பயன் இல்லாத சொற்களை எப்போதுமே சொல்லாம லிருத்தல் நல்லது. 198. அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவாளர்கள் மிக்க பயனற்ற சொற்களை ஒருபொதுமே சொல்லார். 199. மன மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவுடையோர் பயனில்லாத சொற்களை ஒருகால் மறந்தும்கூடச் சொல்லார். 200. சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்லுக பயனற்ற சொற்களை ஒருபோதுமே சொல்லற்க,