பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 54 அதிகாரம் 27 தவம் 251. தமக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும் பிறவுயிருக்குத் துன்பம் இழைக்காதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு உள்ளதான வடிவமாகும். - 262. தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவக் கோலமும் பொருந்துவதாகும் தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அக்கோலத்தை மேற்கொள்வது வீணான முயற்சியாகும். 263 துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுவதன் பொருட்டாகவே இல்லறத்தார்கள் தவம் செய்தலை மறந்தனரோ? 264. பொருந்தாத பகைவரை அடக்குதலும் தம்மை விரும் பும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவ வாழ்வின் பயனால் கைகூடும். 255. விரும்பிய பயன்களை விரும்பியவாறே பெற முடியு மாகையால் செய்வதற்குரிய தவம் இல்லற வாழ்விலும் முயன்று செய்வதற்குரியதாகும். 265. தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர். அல்லாத மற்றையோர் ஆசை வலையுள் சிக்கித் தம் உயிருக்குத் தீமை செய்தவராவர். 25. புடமிடப்பட்டுப் பொன் சுடச்சுட ஒளிவிடுதல் போல, தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த உண்மையான மெய்யுணர்வு ஒளிபெற்று வரும். 288, தான் என்னும் செருக்கு தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமை பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும், 269. தவ நெறியால் ஆன்ம வலிமை பெற்ற ஞானிகட்குத் தம்மிடமிருந்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெல்லுதலும் இயலும், 20. உலகில் மெய்யறிவற்றவர்கள் பலராக இருபபதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதேயாகும்.