பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 56 அதிகாரம் 28 கூடா ஒழுக்கம் 21. வஞ்சமனத்தானது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பாக அமைந்து திகழும் ஐந்து பூதங்களும் கண்டு தம் முள்ளே எள்ளிச் சிரிக்கும். 22 தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் தங்குமானால், அத்தகையவனது வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயனைத் தரும்? 213. மனவலின்ம இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் புலியின் தோலைப் பசு போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும். 24. தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயசெயல்களைச் செய்தல் கொலை குறித்த வேடன் புதரில் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடித்தலை ஒத்தது. 275. பற்றுகளைத் ஆ விட்டதாகப் பாசாங்கு செய்து கொண்டு வாழ்பவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம்? என்ன செய்தோம்? என்று வருந்தும்படியான பல்வகைத் துன்பங் களையும் தரும், 276 மன்த்தில் பற்றுகளைத் துறக்காமல் புறத்திலே துறந் தவரைப்போல காட்டிக்கொண்டு வஞ்சனை செய்து வாழ் கின்றவரைப்போல் இரக்கமற்றவர்கள் எவரும் இல்லை. 27. புறத்தோற்றத்தில் குன்றிமணியின் நிறம்போன்ற செம்மையான தோற்றம் உடையவர்ாகக் காணப்பட்டாலும், உள்ளத் தில் குன்றிமணியின் மூக்குபோலக் கறுத்திருப்பலரும் உண்டு. 28 ஜனத்தில் மாசு நிறைந்திருக்கத் தவத்தால் மாண்பு பெற் நவனைப்போல் நீராடி மறைவாக் வாழ்வு நடத்தும் வஞ்சனை யுடைய மாந்தர்களும் இந்த உலகில் பலர் உள்ளனர். 29. நேராகத் தோன்றினாலும் அம்பு கொடுமை செய்வது. வளைவானாலும், யாழின் கொம்பு இன்னிசையைத் தருவது. மக்களின் பண்புகளையும் இப்படியே அவரவர் செயல்வகையால் அறிந்து கொள்ள வேண்டும். 280, உலகம் பழிக்கும் தீச்செயல்களைத் தவிர்த்துவிட்டால் மொட்டையடித்துக் கொள்ளலும் சடையைச் செயற்கை முறையில் வளர்த்துக் கொள்ளலும் வேண்டா,