பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 58 அதிகாரம் 29 கள்ளாமை 28. உலகினரால் இகழ்ப்பெறாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும். 282. குற்றங்களை மனத்தினால் நினைத்தலும் குற்றமே. பிறன் பொருளை அவன் அறியாத வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும். 283 பிறரை வஞ்சித்து வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவதுபோல் தோன்றினாலும், எல்லாம் எதிர்பாராது வந்ததுபோல விரைந்து கெட்டுப் போகும். 284. களவு செய்தலில் உண்டாகும் மிகுந்த விருப்பம் பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும். 285. அருளைப் பெரிதாக எண்ணி அன்புடையவராய் நடத்தல் பிறர் பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இராது. 286, களவு நெறியின் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லோருமே அளவறிந்து வாழும் நெறியில் நின்று ஒழுகமாட்டார். 28. களவு என்னும் இருண்ட மயக்க அறிவு உள்ளவரிடத்தில் அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பும் போக்கு இராது. 288 அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சத்தில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் 'வஞ்சகம் எப்போதும் நிலைத்திருக்கும். 289. களவல்லாத பிற நல்ல நெறிகளைக் கடைப்பிடித்து பொருள் ஈட்டி வாழ்தலைத் தெளியாதவர் அளவு கடந்த செயல் களைச் செய்து அப்போதே கெட்டழிவர். 290 களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும் களவு செய்யாமல் வாழ்வோருக்கு உம்பருலக வாழ்வும் வாய்க்கத் தவறாது.