பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு § {} அதிகாரம் 30 வாய்மை 29. வாய்மை எனக் கூறப்பெறுவது எது என்றால் அது பிறருக்குத் தீங்கு பயக்காத சொல்லைச் செல்லுதல் ஆகும். 292 குற்றம் இல்லாத நன்மையை விளைவிக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறும் 292 ஒருவன் தன் நெஞ்சு அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லலாகாது. அப்படிப் பொய் சொன்னால் அவனுடைய நெஞ்சமே அவனை வருத்தும் 294 ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானாயின், அத்தகையவன் உலகத்தோர் உள்ளத்தில் எல்லாம் இருக்கும் சிறப்பைப் பெறுவான். 235 ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மையையே பேசுவானானால் அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய் பவரிலும் சிறந்தவனாவான். - 298. ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நலனும் தரும். - 29. ஒருவன் பொய்யாமை என்னும் அறத்தைப் பொய்யாகாமல் செய்து வந்தால் அவன் பிற அறங்களைக் கூடச் செய்ய வேண்டிய தில்லை. 238. ஒருவனது புறத்தூய்மை நீராடுவதனால் ஏற்படும். அது போல் அகத்தே துய்மையாகத் திகழ்தல் உண்மை பேசுவதனால் உண்டாகும். 299, இருளைப் போக்கும் எல்லா விளக்குகளும் சிறந்தவை ஆகா சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே சிறந்ததாக அமையும். 300 யாம் மெய்ப்பொருள்களாக அறிந்தவற்றுள் எல்லாம் வாய்மையைவிடச் சிறப்பான பொருள் வேறுயாதொன்றும் இல்லை.