பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 68 அதிகரம் 34 நிலையாமை 38. நிலைத்து நில்லாத பொருள்களை யெல்லாம் நிலை யானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைவராக இருத்தல் வாழ்க்கையில் மிகுந்த தாழ்நிலையாகும். 332 ஒருவனிடத்துப் பெருஞ்செல்வம் வந்தடைதல் கூத்தாடும் இடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது. அச் செல்வம் கெட்டுப் போதலும் கூத்தாட்டம் முடிந்ததும் அக் கூட்டம் கலைந்து போவதைப் போன்றது. 33. செல்வம் நிலையற்ற இயல்பினையுடையது. அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும். 34. வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வரைப் பெற்றால், நான் என்பது ஒரு சிறு கால அளவைப் போல் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிற்து சிறிதாக அறுத்துச் செல்லும் வாள் என்பது தெளிவாகும். 335. நாளை அடக்கி விக்கல் மேலாக எழுந்து வருவதற்கு முன்பதாகவே இறப்பு நெருங்குவதற்கு முன் நல்ல அறிச் செயல்கள் விரைவாகச் செய்யத்தக்கவையாகும். 336. நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்னும் நிலை யாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம். 33. அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீனில் எண்ணு வனவே கோடியும் அல்ல. அதன் மேலும் அளவற்ற பலவாகும். 38. தான் இருந்த முட்டை ஓடு தனித்துக் கிடக்கவும் பறவை பறந்து வெளியேறிப் போய் விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு, . 39.இறப்பு என்பது ஒருவனுக்கு உறக்கம்வருவதைப் போன்றது. பிறப்பு என்பது அவன் நக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. 340. நோய்கட்கு இடமான உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிருக்கு நிலையாக நுழைந்து தங்குவதற்குரிய ஓர் இடம் இதுகாறும் அமையவில்லை போலும்