பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பரி-உாை) தவம் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன்னறத்தில் தவருத இல்வாழ்க்கை அத்தவம் செய்வார் நிலையினும் பொறையுடைத்து. 9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று. (கோ) அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே, அஃதும் பிறன் பழிப் பது இல்லாயின் நன்று. (ப-ரை) அறன் எனப்பட்டது - அறநெறி என்று சொல் லப்படுவது, இல்வாழ்க்கையே-இல்லறமே யாகும். அஃதும்அவ்வில்லறமும், பிறன் - மற்ருெருவன், பழிப்பது - (பார்த் துப்) பழிக்கத்தக்க செயல், இல்லாயின் - இல்லாமல் நல்ல விதத்தில் இருக்குமேயானல் தான், கன்று - (மிக) நல்லதாகும். (தெ-ாை) எனப்பட்டதே என்பதன் ஈற்றில் உள்ள "ஏ" என்பதை, இல்வாழ்க்கை என்பதன் இறுதியில் கூட்டி, எனப் பட்டது இல்வாழ்க்கையே' என மாற்றுக. இல் வாழ்க் கையே சிறந்தது எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்ட தால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானலும் செய்யலாம் என்று கொள்ளலாகாது; பிறர் பழிக்காதபடி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். எனப்பட்டது-எழுவாய்; இல்வாழ்க்கையே-பயனிலை. அஃதும்-எழுவாய், கன்று-பயனிலை, (மண.உாை) அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல் வாழ்க்கையே; அதுவும் நன்முவது பிறன் ஒருவனல் பழிக்கப்படுவ தொன்றை உடைத்தல்ல வாயின். (பரி-உாை) இருவகை அறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; எனத் துறவறமோ எனின், அதுவும் பிறல்ை பழிக்கப்படுவது இல்லையாயின் அவ்வில்வாழ்க் கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஆராய்ச்சி உரை) அஃதும் என்பதற்குத் துறவறம் எனப் பொருள் கொண்டார் பரிமேலழகர். முதலில் இல்வாழ்க்கை யைக் கூறிப், பின்பு பக்கத்தில் அது என்று சுட்டினல் எது என்று எண்ணிப் பாருங்கள்!