பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 70 — உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்ருர் யாவரிட மும் அன்பு காட்டுவதும், அறம் செய்வதுமே இல்வாழ்க் கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல் வாழ்க்கையின் பலனும் ஆகும் என்ருர், - இஃதென்னl ஒன்றையே இலக்கணமாகவும், பலனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக் கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறு விதமாக உரை பகர்வாராயினர். கூர்ந்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒ ன் று தருவோம். "பிள்ளையின் இலக்கணம் பெற்ருேரைக் காப்பாற்றுத லும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும்” என்று ஒருவர் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையில்ை உண்டாகும் பயனுங்கூட. எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனுகவும் திருவள்ளுவர், குறிப்பிட்டிருப் பதைக் குறித்துத் தியங்கவேண்டா மன்ருே? பண்பும் பயனும்-எழுவாய்; அது-பயனில்லே. (மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய் தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குணமாவதும் பயனவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே. (பரி-உாை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்ருகாவழி இல்லறம் கடை போகாமையின் நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனுயிற்று. (ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லே வைத்திருந்தால் பரிமேலழகர் பகர லாம் அவ்விதம். ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ் வானுக்கும் பெருமை, திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோ ரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியினிடத்திலா அன்பு இல்லாதவகைப் போய்விடுவான். பரிமேலழகர் கூறிய படியே வைத்துக்கொண்டாலும் தம் மனேவியின்மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை ந்ோகச் செய்கின்றனரே! பிறரை என்னl பெற்ருேரையே பேதுறச் (மயங்கச்) செய் கின்றனரே? இதுதான இல்வாழ்க்கையின் இலக்கணம் ? மேலும் பரிம்ேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக் கணமாகவும், அறத்தைப் பலகைவும் பகர்ந்துளார். இங்குக் கூர்ந்து நோக்கவேண்டும். பண்பும் பயனும் அது' என்பது குறள். அது என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும்