பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 71 — உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண் பும் அச்செயல்தான், பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக்கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமேயானல், பண்பும் பயனும் அவை என்று பாடியிருப்பார். அன்பு இலக்கண மாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனகும்போது, அன்பு மட்டும் பயனகாதா? ஆகுமே! 8. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன். - (கோ) அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் போஒய் பெறுவது எவன்? * (ப-ாை) இல்வாழ்க்கை-(ஒருவன்) இல்வாழ்க்கையின, அறதது ஆற்றின் --- அறவழியில்ை, ஆற்றின்-செய்வானே யால்ை, புறத்து ஆற்றில் (இல்லறத்திற்குப் புறம்பான (துறவற) வழியிலே, போஒய் - சென்று, பெறுவது - (புதி தாகப்) பெறக்கூடிய நன்மை, எவன் -எது? (ஒன்றும் இல்லை) (தெ-ாை) நல்ல முறையில் இல்வாழ்க்கையை நடத்தினல், துறவறத்திற்குச் சென்று தான் தீரவேண்டும் என்பது கட் டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய கன் மைகளை யெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது கருத்து. எனவே, உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு, காட்டில் திரிந்து தான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக்கட்டி ஒட்டைச்சுமந்து பிச்சை எடுத்துத்தான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே. ஆனால், பெண்ணுடன் வீட்டிலேயிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடு பட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின் பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத்துறந்த முனிவரும், நுகர்ந்து கண்டவரும் (அநுபவசாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துளார். அது வருமாறு:- - 'காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி ஒடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஒங்கு விண்னேர் நாடேய் இடைமரு சேர்க்கு மெய்யன்பர் நாரியர் பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவு வரே.” என்பது பட்டினத்தார் பாடல். காரியர்-பெண்கள். பெண் ணுடன் இருப்பவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள் என் ருல், ஏனைய இன்பங்களையும் எய்த முடியும் என்பதில் எள் ள்ளவு ஐயமும் இல்லையன்ருே? இதற்கு எடுத்துக்காட்டு வேண்டுமானல் திருவள்ளுவர் வரலாறே போதுமே இன்னும்