பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 74 — (வித்தையை) எங்கு, எவரிடம் கற்றீர்?" என்று வின் வினர்கள். அவர்க்குப் பி ன் வ ரு மாறு பதிலீந்தார் புலவர். "அன்பர்களே! பல ஆண்டு ஆகியும் கரை தோன்ருத ஆற்றலே எங்குக் கற்றீர் என்று வியப்புடன் வினவுகின்றீர்கள். இங்கு வியப்பிற்கே இடமில்லையே. யான் ஒழுங்கான இல் வாழ்க்கை உடையவன். அதல்ை என் மனேவியும், மக்களும் திருந்திய கல் வாழ்க்கையினர். வேலைக்காரரும் அத்தகையோ ரே! எங்கள் அரசனும் அறநெறி நிற்பவன். இன்னும் கேளுங் கள்! பற்றுக்களைத் துறந்த சான்ருேர் பலர் எம் ஊரில் உள்ள னர். இத்தகைய சுற்றுச் சூழலுடன் நல்ல முறையில் யாங்கள் வாழ்க்கை நடத்துவதால், பசி, பிணி யின்றி என்றும் இளைய ளுய்த் திகழ்கின்றேன். யான்" என்று மொழிந்தார். இதனே அப்புலவர் பாடிய 'யாண்டு பல ஆக நாையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின், மாண்ட என் மக்களொடு மனைவியும் நிரம்பினர், யான் கண் டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே' என்னும் புறநானுற்றுப் (191) பொற்பாடலால் அறியலாம். (மாண்ட-சிறந்த இளையர்-வேலை செய்பவர்.) இவ்வரலாற்ருல் அறியக்கிடப்பது என்ன? புலவர் அனே வரையும் ஆற்றின் ஒழுக்கினர். தாமும் அறன் இழுக்காது வாழ்ந்தார். அதல்ை கோற்பாரைவிட நோன்மை பெற்ருர், யோகிகள் யோகவன்மையால் பெறக்கூடிய இளமையை இந்தப் போகி பெற்று வாழ்ந்ததை நோக்குங்கள்! மேலும், இல்வாழ்வான் உணவு, உடை முதலியன உதவில்ைதான் துறவி ஆற்றின் ஒழுதமுடியும் ஆதலின் துறவிகளே ஆற்றின் ஒழுக்குபவனும் அவனே என்பதும் இங்கு நினைவுக்கு வர வேண்டும். மற்றும், துறவிகளின் துறவறத்தவம் பெரும்பா லும் அவர்க்கே பயனளிப்பதாய் இருக்கும். இல்வாழ்வானின் இல்லறத்தவமோ எல்லோர்க்கும் பயனளிக்கும். ஆதலின் அது உயர்ந்தது தானே! இல்வாழ்க்கை-எழுவாய்; உடைத்து.பயனிலை. (மண-உ)ை பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை தவம் செய்வாரினும் வலியுடைத்து,