பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 107 47. எதையும் ஆராய்ந்து செய்யும் திறம் ஒரு செயல் செய்தால் அழியக் கூடியது. பெருகக் கூடியது, பெருகிப் பின்னால் வரக் கூடிய ஊதியம் ஆகிய நிலைகளை ஆராய்ந்து செய்யத் தொடங்குக. 461 தெரிந்தெடுத்த நல்லோர் குழுவுடன் ஆராய்ந்து சூழ்ந்து செயல் புரிவார்க்குக் கிடைக்க முடியாத பொருள் யாதொன்றும் இல்லை. 4.62 பின்னால் ஊதியம் வருமென ஆராயாது எண்ணி முன்னால் முதலையே இழந்து விடக் கூடிய செயல்களில் அறிவுடையவர் ஊக்கங் கொள்ளார். 463 இழிவு தருவதான குற்றத்திற்கு அஞ்சுபவர், ஆராய்ந்து தெளியாத செயலில் இறங்க மாட்டார். 464 செயல் திறங்களை முற்ற ஆராயாமல் போர் போன்ற வினைமேற் செல்லுதல், பகைவரை வளரும் பாத்தியில் பதித்து வளர விடுவதான ஒரு வழியாகும். 465 ஒருவன் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதனாலும் கெடுவான் செய்ய வேண்டிய செயல்களைத் தெரிந்து செய்யாமையாலும் கெடுவான். 4 6 Ꮾ எச் செயலையும் நன்கு ஆராய்ந்தே செய்யத் துணிய வேண்டும் செய்யத் துணிந்தபின் ஆராய்ந்து கொள்வோம் என எண்ணுவது தவறு. " 4.67 உரிய வழியில் வருந்தித் தொடங்காத முயற்சி, பிறகு பலர் துணையாக நின்று முட்டுக் கொடுத்துக் காத்தாலும் பொத்துக் கொண்டு போய்விடும். 468 அவரவருடைய இயல்பை ஆராய்ந்து அறிந்து அவரவர்க் கேற்ப நடந்து கொள்ளா விடின், நற்செயல் புரிவதிலும் தவறு நேரக் கூடும். - 469 தம் நிலைக்கு ஒவ்வாத செயல் முறைகளை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆதலின் எவரும் இகழாத செயல்களாக ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். 47 O