பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் 113 50. ஏற்ற இடமறிந்து செயல்படுதல் பகைவரை முற்றுகை யிடற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்தால் தவிர, எச் செயலையும் தொடங்க வேண்டா பகைவரை எளிதாக இகழவும் வேண்டா. 491 மாறு கொண்ட வலியோர்க்கும், தக்க காவல் நிலையைப் பெற்றிருப்பதால் உள்ள ஆக்கம், பல முன்னேற்றங்களை விளைவிக்கும். 492 ஏற்ற இடம் அறிந்து பகைவரிடம் விழிப்பாய்ச் செயலாற்றின், வெல்ல இயலாதவரும் இயலக் கூடியவராய்ப் பகை யழிப்பர். 493 வினையில் ஈடுபட்டவர் உரிய இடமறிந்து ஆழ்ந்து செயல் புரியின், அவரை அழிக்க எண்ணிய பகைவர் அந்த எண்ணத்தைக் கைவிடுவர். 4.94 முதலை ஆழமான தண்ணீரில் பிற உயிர்களை வென்று விடும். தண்ணீரை விட்டு நீங்கினாலோ அம் முதலையைப் பிற உயிர்கள் கொன்று விடும். 4.95 வன்மையான உருளைகளையுடைய நீண்ட தேர்கள் கடலிலே ஒட மாட்டா, கடலில் ஒடக் கூடிய கப்பல்களும் தரையில் ஒட மாட்டா. 496 எதுவும் குறைபடாமல் நன்கு ஆராய்ந்துஏற்ற இடம் பார்த்துச் செயல்பட்டால், அஞ்சாத துணிவு என்னும் ஒரு துணை தவிர வேறு துணை தேவையில்லை. 497 சிறிய படையை உடையவனுக்குச் செல்வாக்கு உள்ள இடத்தை அடைந்தால் பெரிய படையுடையவனும் ஊக்கம் இழந்து ஓடி வந்து விடுவான். 498 பகைமாந்தர் நலமான காவல் நிலைகளும் பிற பெருமைகளும் பெற்றிராவிடினும் அவர் வாழும் இடத்தில் சென்று அவரை வெல்லுதல் அருமை. 499 வேல் மறவன் ஒருவனைக் குத்திக் கோத்துக் கொண்டிருக் கிற மருப்போடு கூடிய முகமுடைய அஞ்சாத ஆண் யானையையும், கால் ஆழ்ந்து பதியக் கூடிய சேற்றுக் களர் நிலத்தில் ஒரு சிறு நரி கொன்று விடும். 500