பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 பொருள் 51. தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு, குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும். தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். 5O1 5O2 5O3 5O4 505 5O6 5O7 5O8 5O9 51Ο