பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் 117 52. ஒருவரை ஆராய்ந்து வேலைவாங்குதல் நன்மையானவற்றையும், தீமையானவற்றையும் ஆராய்ந்து நல்லனவற்றைச் செய்யும் இயல்புடைய வனையே வேலை செய்ய விட வேண்டும். 511 வருவாயை மிகுத்து வளம் உண்டாக்கி உற்ற விளைவுகளை ஆராய்ந்து மதிப்பிடத் தக்கவனே செயல் செய்வானாக. 5 12 அன்பு, அறிவு, உறுதி, அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் பெற்றிருப்பவனிடமே வேலையை நம்பி விட வேண்டும். 513 எந்த வகையில் ஆராய்ந்து நம்பிய பிறகும் வேலையின் போக்கினால் மனம் மாறி விடுகிற மக்கள் உலகில் பலர் உளர். 514 செய்யும் திறம் அறிந்து தாக்குப் பிடித்து வேலை செய்யக் கூடியவனைத் தவிர, நல்லவன் என்பதற்காக வேறொருவனிடம் வேலை ஏவத்தக்க தன்று. 515 செய்பவனது இயல்பையும் ஆராய்ந்து வேலையின் போக்கையும் சீர்தூக்கித் தக்க காலத்தோடு பொருந்த அறிந்து செய்ய விடுக. 516 இந்தச் செயலை இன்ன வகையில் இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து அறிந்த பின், அந்தச் செயலை அவனிடம் ஏவி விடுக. 517 இந்த வினைக்கு, இவன் தகுதியானவன் என்பதை ஆராய்ந்தறிந்த பின், அவ்வினைக்கு அவனை உரியவனாகச் செய்க. 518 ஒரு செயல் செய்யுங்காள், அச்செயல் செய்பவன் பாராட்டும் நட்பை வேறு விதமாக எண்ணும் வேந்தனை விட்டுச் செல்வம் விலகும். 519 வினை செய்பவன் தவறினால் ஒழிய உலகம் தவறிக் கெடாது; ஆதலால், நாள்தோறும் வேந்தன் நிலைமையைக் கண்காணித்து வருவானாக. 520