பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 119 53. சுற்றத்தாரைத் தழுவிக் காத்தல் ஒருவரிடம் செல்வப் பசை அற்று விடினும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டிப் பேசுதல் உறவினர்க்கு உள்ள இயற்கை. 521 அன்பு குறையாத சுற்றத்தார் சேர்ந்திருந்தால் பெருக்கம் குன்றாத பல பேறுகளையும் விளைக்கும். 522 சுற்றத்தாரிடம் மனம் விட்டு அளவளாவாதவனது வாழ்வு, குளத்தின் பரப்பு கரையில்லாமல் நீர்நிறைந்தது போன்றதாம். 523 சுற்றத்தாரால் சூழப்பட்டு வாழ்வதுதான், தான் செல்வம் பெற்றிருப்பதால் கிடைத்த பயன். 524 வேண்டியது ஈதலும் இன்சொல் பேசுதலும்ஒருவன் செய்யின், ஒருவர்.பின் ஒருவராக அடுக்கித் தொடரும் சுற்றத்தாரால் சூழப்பட்டிருப்பான். - 525 பெரிய உதவியாளனாகவும், சினம் கொள்ளாத வனாகவும் உள்ள ஒருவனை விட சுற்றம் மிக உடையவர் இப் பெரிய உலகில் இல்லை. 526 இரை கிடைத்தால் காகம் மறைக்காது தன் இனத்தையும் கூவியழைத்து உடன் உண்ணும்; செல்வங்களும் அது போன்ற தன்மையுடையார்க்கே இருக்கத் தக்கனவாம். 527 மன்னவன் எல்லாவற்றையும் பொதுவாக நடத்தாமல் அவரவரது தகுதிக்கு ஏற்ப நடத்தினால் அப்பொருத்தப் பாட்டை மெச்சிச் சுற்றத்தார் பலரும் சூழ்ந்து வாழ்வார். 528 முதலில் தம் உறவினராயிருந்த பின்பு ஒரு காரணத்தால் விலகியவரின் கூட்டம், சேராது விலகியதற்குரிய காரணம் இல்லாதபடிச் செய்துவிட்டால் மீண்டும் வந்து சேரும். 529 தன்னிடமிருந்து பிரிந்துபோய் மீண்டும் ஒரு குறிக்கோளுக்காக வந்தவனை, மன்னவன், வேண்டியதைச் செய்து நன்கு ஆராய்ந்து சேர்த்துக் கொள்க. 530