பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் 125 56. கொடிய ஆட்சி முறை குடிகளை அலையப் பண்ணி நீதியற்ற கொடுமைகளைச் செய்து நடக்கும் அரசன், கொலைத் தொழில் புரியும் கொடியோரினும் கொடியவனாம். - 551 கையில் ஆணைக்கோல் தாங்கி நிற்கும் அரசன் குடிகளிடம் மிகுதியாகப் பொருள் வேண்டல், தனியிடத்தில் வேல் கொண்டு நிற்கும் திருடன் காசு கொடு என்று அச்சுறுத்தி வாங்குவது போலும். 552 நாட்டு நடப்புக்களை அன்றைக்கன்று ஆராய்ந்துஒழுங்கு செய்யாத அரசன் நாள்தோறும் சிறுகச் சிறுக நாட்டை இழப்பான். 55こ செங்கோல் கோணி எதையும் ஆராயாமல் ஆட்சி புரியும் அரசன், உணவு முதலிய பொருள்களையும் குடிமக்களை யும் ஒருசேர இழந்து போவான். 554 அரசனால் தொல்லைப்பட்டுத் துயர் தாளாமல் மக்கள் அழுதுவிடும் கண்ணிர் அவ்வரசனது செல்வத்தை அழிக்கும் படைக்கலம் அல்லவா? 555 அரசர்க்குப் புகழ் நிலைபெற வேண்டுமெனில் செங் கோல் ஆட்சி வேண்டும்; அஃது இன்றிக் கொடுங்கோல் செலுத்தின் பேரும் புகழும் நிலைபெறா. 556 மழையில்லா வறட்சி உலகத்திற்கு என்ன செய்யுமோ, அன்னதையே, அரசனது அருளில்லாக் கொடுங்கோன்மை யும் நாட்டில் வாழும் குடிகட்குச் செய்யும். 557 நீதியில்லாத மன்னனது கொடுங்கோலின் கீழ் அகப்பட்டுக் கொண்டால், வறுமையைக் காட்டிலும் செல்வம் உடைமை துன்பமாய்த் தோன்றும். 558 வேந்தன் முறை கோணி ஆளின், அவன் நாட்டில் மேகம் மழை தவறச் செய்து பெய்தலை நடத்தாது. 559 காக்க வேண்டிய மன்னன் நன்கு காவாது கொடுங்கோல் புரியின், அவன் நாட்டில் பசுவின் பால் பயன் குறையும்; அந்தணர் மறை ஒதலை மறப்பர். 56O