பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 129 58. அருள்கண் கொள்ளுதல் வேந்தரிடம் கண்ணோட்டம் (கண் இரக்கம்) என்னும் மிக உயர்ந்த அழகு இருப்பதனால்தான் இந்த உலகம் வாழ்கிறது. 57.1 உலக நடைமுறை கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, அக் கண்ணோட்டம் இல்லாதவர் உயிர் வாழ்தல் நிலத்திற்குச் சுமையே. 572 பாட்டோடு பொருந்தாதபோது இசை என்ன பயன் தரும்? அதுபோல, கண்ணோட்டம் இல்லாத போது கண் என்ன பயன் தரும்? 573 அளவோடு கண்ணோட்டம் பெற்றிராத கண் முகத்தில் உள்ளதுபோல் தெரிவது தவிர வேறு என்ன நன்மை விளைக்கும்? 574 கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே, அக் கண்ணோட்டம் இல்லையென்றால் கண் புண் என்றே கருதப்படும். 575 கண்ணோடு சேர்ந்திருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், மேலே மண் பூசிச் செய்யப்பட்ட மரப் பதுமையை ஒப்பர். 576 கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே. உண்மையில் கண் உடையவர் எனப்படுபவரிடத்தில் கண்ணோட்டம் இல்லாமல் இருக்காது. 577 மேற்கொண்ட செயல்கள் கெடாத அளவுக்குக் கண் ணோட வல்ல அரசர்க்கு இவ்வுலகம் உரிமையுடையதாம். 578 தம்மை ஒறுத்து வருத்தும் இயல்புடையவரிடத்தும் கண்ணிரக்கம் காட்டிப் பிழை பொறுத்து ஆற்றிச் செல்லும் பண்பே மேலானது. 579 எவரும் விரும்பும்படியான கண்ணோட்டம் என்னும் நாகரிகத்தை விரும்புபவர், ஒருவர் நஞ்சை ஊற்றித் தர நேரில் பார்த்தும், அவரை மகிழ்விப்பதற்காக அந் நஞ்சை அருந்தி அமைதி கொள்வர். 580