பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 133 60. ஊக்கம் கொள்ளுதல் ஒருவர் சிறந்த உடைமை உடையவர் என்றால் அவ்வுடைமை ஊக்கம்தான்; அவ்வூக்கம் இல்லாதவர் வேறு ஏதேனும் உடையவராயிருப்பினும் உண்மையில் உடையவர் ஆவாரோ? 591 ஊக்கம் உடைமையே உண்மையான உடைமை; செல்வமாகிய உடைமையோ நிலைத்து நில்லாது நீங்கிப் போகும். - 592 ஊக்கத்தை நிலையாகக் கைக்கொண்டொழுகுபவர், ஆக்கத்தை இழந்து விட்டோமே என்று அலையார். 595 அசைக்க முடியாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கம் வழி கேட்டுக் கொண்டு தானாகச் செல்லும். 59.4 நீர்ப் பூக்களின் நீளம் நீர்மட்டத்திற்கு ஏற்ப இருக்கும்; மக்களுக்குச் சிறப்பு, அவர்தம் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். 595 எண்ணுவதெல்லாம் உயர்வாகவே எண்ணுக, அந்த உயர் எண்ணம் கைகூடாமல் தவறினாலும், தவறாத தன்மைய தாகவே பொருள். - 596 யானை உடல் முழுதும் புதைந்த அம்புகட்கிடையே அகப்பட்டபோதும் தளராமல் தன் பெருமிதத்தை நிலைநாட்டும்; அதுபோல, ஊக்கமுடையவர் வாழ்வு சிதைந்த போதும் சோர மாட்டார்கள். 597 உலகத்திலே யாம் வள்ளல் தன்மை உடையோம் என்னும் இறுமாந்த நிலையை ஊக்கம் இல்லாதவர் அடைய முடியாது. 598 யானை பருத்ததாகவும் கூரிய கொம்பு உடையதாகவும் இருப்பினும், தன்னிலும் ஊக்கமுடைய புலியால் தாக்கப்பட்டால் அஞ்சும். 599 ஊக்கமிகுதியே ஒருவனுக்கு வலிமையாகும். அவ்வூக்கம் இல்லாதவர் மரமேயாவர்; ஆனால் மக்கள் வடிவில் இருப்பது ஒன்றுதான் வேறுபாடு. 600