பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பொருள் 61. மடி இன்மை குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். 6O1 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். 6O2 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. ᏮO3 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. 6O4 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். 6O5 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. 6O6 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட லவர். 6O7 மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். ᏮO8 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். 6O9 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. 61O