பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 139 63. துன்பத்திற்குக் கலங்காமை துன்பம் வந்தபோது சிரிப்பீராக அத்துன்பத்தை நெருக்கி மேலேறி ஊர்ந்து (சவாரி) செல்லக் கூடிய கருவி அச்சிரிப்பைப் போல் வேறொன்றும் இல்லை. 621 வெள்ளம் போல் அளவற்று வந்த துன்பங்களும் அறிவாளி மன ஊக்கத்துடன் அவற்றை இழிவாய் எண்ணிய அளவில் மறைந்துவிடும். 622 துன்பம் வந்து விட்டதற்காகத் துன்பப் படாதவர் அத் துன்பத்திற்கே துன்பம் கொடுத்து ஒட்டுவர். 623 துன்பம் தடைப்படுத்திய போதெல்லாம், எங்கும் வண்டியிழுக்கும் எருதுபோல நின்று தாக்குப் பிடிப்பவன் அடைந்த துன்பம் துன்பப்பட்டு விடும். 624 மேன்மேலும் தொடர்ந்து வந்தாலும் உள்ளம் உடையாத வனை அடைந்த துன்பங்கள் துன்பப்பட்டு ஓடும். 625 செல்வம் உள்ளபோது பெற்று விட்டோம் என்று தம்மிடமே வைத்துக் காவல் காப்பதை அறியாதவர்கள், செல்வம் அற்ற போது இழந்து விட்டோம் என்று துன்பப்படுவார்களா? 626 மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்காவது இயற்கை என்று அறிந்து கொண்டு கலக்கத்தைக் கலக்கமாகப் பொருட்படுத்த மாட்டார்கள். . 627 இன்பம் ஒன்றையே விரும்பாதவனாய், துன்பம் வருதல் இயற்கை என்பதை உணர்ந்திருப்பவன் என்றும் துன்பம் அடைதல் இல்லை. 628 இன்பம் வந்தபோது அந்த இன்பத்தை இன்புற்றுப் பொருட்படுத்தாதவன், துன்பம் வந்தபோது அந்தத் துன்பத்தால் துன்புறுதல் இல்லை. 629 துன்பத்தை இன்பமாக எண்ணும் உளப்பான்மையை ஒருவன் கொண்டால், தன் பகைவரும் விரும்பும் பெருமிதம் அவனுக்குக் கிடைக்கும். 630