பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 151 69, தூது செல்பவன் இயல்பு அன்பு உடைமை, உயர்ந்த குடிப் பிறப்பு, அரசன் விரும்பும் உயர் பண்பு உடைமை ஆகியவை, தூது பேசுபவனுக்கு உரிய இயல்புகளாம். 681 அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் பேச்சு வன்மை ஆகிய மூன்றும் தூதருக்கு இன்றியமையாதவை. 682 வேலேந்திய வேற்று மன்னரிடம் தன் வேந்தனுக்கு வெற்றி தரும் செயல் திட்டங்களைப் பேசும் தூதனுக்கு உரிய பண்பு, நூல் வல்ல அறிஞர்களுக்குள் சிறந்த நூல் வல்லவனாகத் தான் திகழ்வதுதான். 683 கூரிய அறிவு, கவர்ச்சியான தோற்றம், ஆராய்ச்சிப் படிப்பு ஆகிய இம்மூன்றின் சேர்க்கை உடையவன் தூது வேலைக்குச் செல்வானாக. 684 வேற்றரசரிடம் பல செய்திகளையும் தொடர்புடன் தொகுத்துச் சொல்லியும், விரும்பத் தகாதவற்றை விலக்கியும், கேட்பவர் மகிழப் பேசியும் தன் மன்னனுக்கு நன்மை விளைவிப்பவனே தூதன். 685 நல்லன கற்று, பிறர் கடும்பார்வைக்கு அஞ்சாது கேட்பவர் உள்ளத்தில் பதியும்படிப் பேசி, காலத்துக்கு ஏற்ற நடைமுறையை அறிபவனே தூதன். 6.86 கடமை உணர்ந்து உரிய காலம் பார்த்து ஏற்ற இடமறிந்து ஆராய்ந்து பேசும் தூதனே சிறந்தவன். 687 தூய தன்மை, தக்க துணை உடைமை, துணிச்சல் உடைமை ஆகிய மூன்றின் உண்மை, தன் அரசன் வழி நின்று பேசும் தூதனது பண்பு. 688 குற்றமான பேச்சுக்களை வாய் தவறியும் பேசாத திண்மை உடையவனே, தன் மன்னன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சொல்வதற்கேற்ற தூதன். 689 தனக்கு முடிவு நேரினும் விடாமல் தன் மன்னர்க்கு நன்மை தேடுபவனே நல்ல தூதன். 690