பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 153 70. அரசரைச் சார்ந்து வாழும் முறை வலிய அரசரைச் சார்ந்து வாழ்பவர், மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் நெருப்பின் முன் குளிர் காய்பவர் போல் நடுவாக நடந்து கொள்க. 691 அரசர் விரும்பும் பொருள்களைத் தாம் விரும்பாதிருக்கும் பண்பு, அரசரால் நிலைத்த ஆக்கம் கிடைக்கும்படிச் செய்யும். 692 தம்மைக் காக்க எண்ணினால், அரிய பொருட்களைப் போற்றிக் காக்க தம்மேல் ஐயுற்ற பின்னர் அரசரை நம்ப வைத்தல் யார்க்கும் இயலாது. 693 உயர்ந்த பேரரசர் எதிரில், மற்றொருவனது காதோடு பேசுதலையும் அவனோடு சேர்ந்து சிரிப்பதையும் விலக்கி ஒழுகுக. 694 அரசர் பேசும் எந்த மறைபொருளையும் ஒட்டுக் கேளாதவராய் அரசரைப் பின் தொடராதவராய் இருந்து, பிறகு அந்த மறைபொருளை அரசர் தாமாக வெளிவிடும்போதுதான் கேட்க வேண்டும். 695 அரசரது குறிப்பு அறிந்து ஏற்ற காலம் நோக்கி அரசர் வெறுக்காதவற்றையும் விரும்புகின்றவற்றையும் அவர் மனம் மகிழும்படிச் சொல்லுக. 696 அரசர் விரும்பும் பயனுள்ள செய்திகளை அவர் கேட்காமலேயே சொல்லி, பயனில்லாச் செய்திகளை அவர் கேட்டாலும் என்றும் சொல்லாது விடுக. 697 வேந்தர் என்னிலும் இளையர் எனக்கு இன்ன தொடர்பு முறை உடையவர் என்று இகழாது அவருக்கு உள்ள புகழொடு பொருந்த நடக்க வேண்டும். 698 கலக்க மற்ற அறிவுடையவர், அரசரால் ஏற்றுக் கொள்ளப்பட்டோம் என்று நம்பி, அரசர் ஏற்றுக் கொள்ளாத தீச் செயல்களைச் செய்யார். 699 "யாம் மன்னர்க்கு மிகப் H༩ལོ་༡:;" | தொடர்புடையோம்' என்று எண்ணிப் பண்பு அற்ற செயல் புரியும் உரிமைத் தன்மை அழிவு விளைக்கும். 7 OO