பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 155 71. கூறாமலே குறிப்பு உணர்ந்து நடத்தல் ஒருவர் சொல்லாமலேயே அவரது முகத்தைப் பார்த்து அவர் உள்ளத்தில் குறித்த எண்ணத்தை அறிய வல்லவன், வற்றாத கடல் சூழ்ந்த உலகினர்க்கு ஒர் அணிகலன் போன்றவன். 701 ஒருவரது உள்ளத்தில் உள்ளதை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாக உணரவல்லவனைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்க வேண்டும். 702 பிறரது உள்ளத்தின் குறிப்பைக் குறிப்பால் உணரக் கூடியவரை, அரசர் தம்ஆட்சி உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாயினும் துணையாகப் பெறுக. 703 ஒருவர் உள்ளத்தில் எண்ணியதை அவர் கூறாமலே உணர்ந்து கொள்பவரோடு மற்றையவர் உறுப்பால் ஒத்துள்ளன ராயினும் அறிவால் வேறாவர். 704 ஒருவரது உள்ளக் குறிப்பைக் குறிப்பாகக் கண்கள் அறிய மாட்டா என்றால், உறுப்புக்களுள் கண்கள் வேறு என்ன நன்மை பயக்குமோ? 7 O5 ன் எதிரே அடுத்த பொருளை உள்ளவாறு காட்டும் பளிங்கு (கண்ணடி) போல, உள்ளத்தில் மிக்குள்ள எண்ணத்தை முகம் அப்படியே அறிவிக்கும். 7O6 உள்ளம் மகிழ்ந்தாலும், வெறுத்தாலும் அக் குறிப்பை முகம் தான் முந்திக் காட்டிவிடும். எனவே முகத்தை விட அறிவு முதிர்ந்த பொருள் வேறு உளதோ? 707 தம் உள்ளத்தைக் குறிப்பால் நோக்கி உற்ற எண்ணத்தை அறிய வல்லவரைப் பெற்றால், தாம் ஒன்றும் கூறாமல் அவரது முகம் நோக்கி நின்றால் போதும். 7 O8 கண்ணோக்கத்தின் கூறுபாடுகளை அறிய வல்லவர் இருந்தால், பிறர் உள்ளத்தில் உள்ள பகையையும் நட்பையும் அவர் கண்களே உரைக்க அறியலாம். 7 OS "யாம் நுண்ணிய அறிவுடையேம்' என்பவர் பிறரது உள்ளத்தை அளக்க உதவும் அளவு கோல், ஆராயுங்கால், அவர் கண்கள் தவிர வேறில்லை. 710